இன்று அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த தினம் - மின் விளக்குகளால் ஜொலிக்கும் தேசிய நினைவகம்

x

இன்று அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த தினம் - மின் விளக்குகளால் ஜொலிக்கும் தேசிய நினைவகம்

அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்தநாளையொட்டி, ராமேஸ்வரம் அருகே உள்ள அவருடைய நினைவிடம், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அவர் மறைந்த பிறகு, அவருடைய உடல், அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, அவருடைய மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலாமின் குடும்ப உறுப்பினர்கள் அவருடைய நினைவகத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்