இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2023)

x

சென்னை கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு...மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை வர விடாமல் தடுத்து விட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என்றும் உறுதி...

"தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது..."தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

செந்தில்பாலாஜியை நீக்கும்படி, கடந்த 31ம் தேதியே முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி... அமலாக்கத்துறை சோதனைக்கு முன்பே ஆளுநர் கடிதம் எழுதுகிறார் என்றால் இதன் பின்னணி என்ன? என்றும் அமைச்சர் பொன்முடி கேள்வி..

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு... ஜூன் 22ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி... அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவக் குழு ஆராயலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி...பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனையில் அனுமதி...


Next Story

மேலும் செய்திகள்