இன்றைய தலைப்பு செய்திகள் (15-06-2023)

x

அமைச்சர் செந்தில்பாலாஜி வசமிருந்த இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்... நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறை ஒதுக்கீடு... மதுவிலக்கு துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என்றும் தகவல்...

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது சம்பவம் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்..... திமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை....

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது சம்பவம் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்... தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...

மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை... பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை... தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி எனவும், முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள்...சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு... ஜூன் 28-க்கு தள்ளிவைப்பு...

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு...ஜூன் 22ம் தேதிக்கு விசாரணை விசாரணை தள்ளிவைப்பு..


Next Story

மேலும் செய்திகள்