இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...வடிகால் பணி காரணமாக பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று பெருமிதம்...திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் அரசு தயார் எனவும் உறுதி...

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை திறந்துவைக்க உள்ள நிலையில், ஏற்பாடுகள் தயார்...

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை இன்று மேல்முறையீடு...நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம்...பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...

மணிப்பூரில் கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்...வருங்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுப்போம் எனவும்.முதலமைச்சர் பைரன் சிங் இன்று உறுதி...

X

Thanthi TV
www.thanthitv.com