Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழ்நாட்டில் எம்.பி தொகுதிகளை குறைக்க சதி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்கு தண்டனை எனவும் விமர்சனம்....

காலப்போக்கில் பட்டியல் இன இட ஒதுக்கீட்டை காலி செய்யப்போகும் ஆபத்து இருக்கிறது..மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...

தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என்று மக்களிடம் கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்...தமிழகத்தின் உரிமையை காக்கவே தனித்து போட்டி எனவும், அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணையும் எனவும் உறுதி...

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக டெபாசிட் வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி...தமிழ்நாட்டில் பாஜகவால் சொந்த காலில் நிற்க முடியாது எனவும் கருத்து...

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு...ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல்...

தேமுதிக யாருடன் கூட்டணி என்று ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தகவல்...பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு...

ராகுல்காந்தியை ராவணன் போல பாஜகவினர் சித்தரித்ததை கண்டித்து காங்கிரசார் போராட்டம்...ராகுல்காந்திக்கு 10 தலைகள் அல்ல... 140 கோடி தலைகள் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு...

தன் மீதான வழக்குகளை மறைத்து தேர்தலில் சீமான் போட்டியிட்டுள்ளார்...உள்துறை செயலாளர் அமுதாவிடம் வீரலட்சுமி புகார்...

சீமானை இழிவு படுத்துவதே வீரலட்சுமியின் நோக்கம் என நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு...தனது தற்போதைய நிலைமைக்கு வீரலட்சுமியே காரணம் எனவும் ஆவேசம்...

சட்ட சிக்கல்கள் தீர்ந்த பிறகே, நாயக்கநேரி ஊராட்சியில் பட்டியலின பெண் ஊராட்சி தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்யப்படும்...திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு மேலும் 40 நாட்கள் அவகாசம்...பெங்களூரு நீதிமன்றம் அனுமதி....

அருப்புக்கோட்டை அருகே தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை...5 மணி நேரம் நீடித்த சோதனையில் 45 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின...

சென்னையில் 741 டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க டெண்டர் அறிவிப்பு...வருகிற 27ஆம் தேதிக்குள் டெண்டரை சமர்ப்பிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு...

தமிழர்களின் பழமையான பல கண்டுபிடிப்புகளின் வரலாற்றை வெளியில் கொண்டு வந்த, தமிழ் ஆய்வாளர் ஒடிசா பாலு மரணம்...சென்னையில் இன்று ஒடிசா பாலுவின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது...

லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கும், காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...https://www.youtube.com/watch?v=qsOYgMKx5_wதயாரிப்பு நிறுவனம் தான் ரத்து செய்தது எனவும் இசை வெளியீட்டு விழாவிற்கு, தற்போது அனுமதி கோரினாலும் பரிசீலிக்க தயார் எனவும் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்