காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2025) || 6 AM Headlines | ThanthiTV | Today Headlines
- பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தினோம், யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்கவில்லை, ஏற்க போவதும் இல்லை.... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம், பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்....
- இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து...பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் என்றும், பாகிஸ்தானை தமக்கு பிடிக்கும் என்றும் டிரம்ப் பேச்சு...
- இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் அதற்கான தண்டனையை கொடுப்போம் எனவும், ஈரான் தலைவர் கமேனி திட்டவட்டம்... அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை...
- ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள காவல் தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்...போலீசார் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்...
- டெஹ்ரானின் வான்பரப்பை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.. அணு ஆயுத அமைப்புகள், ஏவுகணைகள், கட்டளை மையங்களை தாக்கி வருவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு...
- இஸ்ரேலுக்கு இருக்கக் கூடிய அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை அகற்றவே ஆபரேஷன் ரைசிங் லயன் துவக்கம்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம்..
- அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு... வெள்ளை மாளிகையில் உள்ள கேபினட் அறையில் அசீம் முனீருக்கு விருந்தளித்த டிரம்ப்...
- ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்கா இணையுமா என்ற கேள்விக்கு "இணையலாம்... இணையாமலும் இருக்கலாம்" என்று டிரம்ப் சூசகமாக பதில்... ஈரானுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளதாகவும் கருத்து...
- ஈரான் தங்களிடம் எந்த ராணுவ உதவியும் கேட்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்... ஜூன் 22க்கு பின் ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும் என்றும் அறிவிப்பு...
Next Story
