Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

கத்திரி வெயில் துவங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை....காஞ்சிபுரத்தில் ஒரு மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவு....

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...வருகிற 8ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுபெறக்கூடும் எனவும் அறிவிப்பு...

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு...கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் எனவும் விளக்கம்...

திமுக அரசின் ஈராண்டு நிறைவு விழா சாதனை மலர் இன்று வெளியீடு...முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்...

திமுக ஆட்சியில் வணிகர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது...எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

ஆளுநர் மாளிகை அரசியல் மாளிகையாக செயல்பட்டாலும், இரும்பு மனிதராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்...அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

சிதம்பரத்தில், சிறுமிகளுக்கு கன்னிதன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் ரவி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு...தமிழ்நாடு காவல்துறை மறுப்பு...

மார்க்சியம் மற்றும் சனாதன கொள்கை குறித்து பொது​ மேடையில் விவாதிக்கத் தயாரா...?ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சவால்...

மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச கட்டணம் என அறிவித்து விட்டு, பேருந்து சேவையை குறைப்பதா?....தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.....

திமுக ஆட்சியில் ஒரு பேருந்து கூட நிறுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்...உண்மை நிலை தெரியாமல் அறிக்கை விடுவது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும் பேச்சு...

பேருந்து விவகாரத்தில், தான் பேசியதை திரித்துக் கூறி விட்டனர்...தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் விளக்கம்...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்...கர்நாடகா நீதிமன்றத்தில், ஜெ.தீபா மனு தாக்கல்...

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்து 10ஆம் தேதி பேச்சுவார்த்தை...19 தொழிற்சாங்கத்தினருக்கு அழைப்பு...

தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் காண்பிக்கிறது...காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்தை ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு....

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக போராடிய 180 பேர் மீது வழக்கு...தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் மீது போலீசார் நடவடிக்கை...

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்க்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை...காங்கிரசும், கம்யூனிஸ்டும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் கிடையாது எனவும் கருத்து...

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை...சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார்...

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சியில் 5 பேர் மர்ம மரணம்...ஆழ்வார்புரம் தடுப்பணை மற்றும் கல்பாலம் பகுதியில் 3 சடலங்கள் மீட்பு...

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.....உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு....

பருப்பு வகைகளை நீண்ட நாட்களாக பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை...உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்ட வேண்டுமானால், சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்