Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம்.....நான்கு ரத வீதிகளிலும் மக்கள் வெள்ளம்....

தமிழகத்தில் முதன்முறையாக ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகம் தொடக்கம்...நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது....

தென்பெண்ணை நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்...மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு...

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களில் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி டிசம்பர் இறுதியில் தொடங்கும்....மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று, கொடுத்த வாக்குறுதியை, முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்...ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை....

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை....அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு....

காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் வாரண்டி இல்லாதவர்கள் கொடுக்கும் கேரண்டி...கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கிண்டல்...

கர்நாடகாவில் ஊழல்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?...பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி...

திமுகவை போன்று பொய்யான வாக்குறுதிகளை கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்....

பி.எஃப்.ஐ தடை போலவே, பஜ்ரங் தல் அமைப்பும் தடை செய்யப்படும் என கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதி...ஹனுமான் பக்தர்களை சிறையில் அடைக்க பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்