Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்...முதல்வரின் ஜப்பான் பயணம் மற்றும் அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என தகவல்...

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் மழையால் மக்கள் மகிழ்ச்சி...

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை....கிண்டி, மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட இடங்களிலும், சென்னை புறநகர் பகுதிகளிலம் இரண்டாவது நாளாக இரவில் மழை பெய்தது...

கம்பம், உத்தமபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு...சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை...

ஏற்காடு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து தந்தை, மகள் உயிரிழப்பு...சென்னையில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்...

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்...மலர்களால் மணமேடை தயார்... ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு திருமண விருந்து ஏற்பாடு...

பொது வாழ்வில் கடும் விமர்சனங்களை தாங்குவதற்கு, பகவத் கீதை அதிக வலிமையை வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..குருக்கள் ஞானிகளால் கூட கீதையின் அர்த்தத்தை முழுமையாக அறிய முடியாது என்றும் கருத்து...

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு...

மக்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து விட்டு, அதை நிறுத்தி வைப்பதை துணிச்சல் என்று பெருமை பேசுவதா...?12 மணி நேர வேலை விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

மக்கள் விரோத அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு, அதனை திரும்பப் பெறுவது தான் திராவிட மாடல் ஆட்சியா என டி.டி.வி. தினகரன் கேள்வி...திமுக ஆட்சியின் பேச்சு ஒன்றாகவும், செயல் வேறாக இருப்பதாகவும் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்