Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

திமுக அரசின் 3ஆவது ஆண்டையொட்டி, தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்....புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்...

திமுக அரசின் 24 மாத ஆட்சியில், எந்த புதிய பணிகளும் நடைபெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..சிறிய பணிகளை செய்து விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறுவதாகவும் விமர்சனம்...

தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தவர், எடப்பாடி பழனிசாமி...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு...

இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை பிளாக் மெயில் செய்யும் வேலையை பாஜக செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு...நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை...

தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சியாக இருந்தாலும், தேர்தலின் முகமாக பிரதமர் மோடி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துநாட்டில், ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும் எனவும் உறுதி...

பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லையா?...அண்ணாமலை விளக்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசுவதை நிறுத்தாவிட்டால் நாங்களும் பேசுவோம்...அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை...

தானியங்கி எந்திரம் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்ற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது...விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை...

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வி...4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி...

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்...பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள் மறியலால், சிஎஸ்கே வீரர்கள் சென்ற வாகனம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.....

ஐ.பி.எல் தொடரின் மற்றொரு லீக் போட்டியில், மும்பை அணி வெற்றி....ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 213 ரன்கள் இலக்கை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எட்டியது....


Next Story

மேலும் செய்திகள்