Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.....வாரணாசியில் நடந்த காசி தெலுங்கு சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...

நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ சுற்றுலா மாநாடு....முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, கையேட்டை வெளியிட்டார்.....

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் கல்வியில் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டது....உயர்கல்வியில் 2030-ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2020 ஆண்டிலேயே அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்....

எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு...கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் வணிக வளாகங்களில்தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளதாக விளக்கம்....

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களால், திமுகவுக்கு மோசமான பெயர் தான் வரும்....பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு...

தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்வதா? புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி...

கர்நாடகாவில் களைகட்டியது தேர்தல் பிரசாரம்....வாகனத்தில் சென்று பிரதமர் மோடி பிரசாரம்... பூக்களை தூவி தொண்டர்கள் உற்சாகம்...

ராகுல் காந்தி மனு மீதான விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது, குஜராத் உயர்நீதிமன்றம்....அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி வழக்கில் உத்தரவு...

ஐதராபாத்தில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இருவர் சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி...தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல்...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ்.....அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு.....

ஆருத்ரா விவகாரத்தில், அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்...இல்லையென்றால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ்....

மதிமுகவை திமுக-வுடன் இணைத்து விடலாம் என, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம்..முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ வலியுறுத்தல்....

துரை வைகோவை சின்னப் பையன் என விமர்சித்த திருப்பூர் துரைசாமி....வைகோவுக்கு மட்டுமே பதில் கூற முடியும் எனவும் கருத்து...

விடுமுறை தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்....நள்ளிரவை கடந்தும் காத்துக்கிடந்த பயணிகள்... போதிய பேருந்துகள் இல்லை என புகார்..


Next Story

மேலும் செய்திகள்