Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்தார் குருபகவான்....தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு...
  • திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா...சிறப்பு அபிஷேக, ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு...
  • 12 மணிநேர வேலை மசோதா குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை.....அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் 24 ஆம் தேதி கருத்துக்கேட்பு.....
  • 12 மணி நேர வேலை என்ற தொழிலாளர் சட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்...அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
  • தான் பேசியதாக வெளியான 26 நொடி ஆடியோ புனையப்பட்டது...தடயவியல் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்...
  • ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்...
  • பொதுவெளியில் வெளியிட்ட தகவல்கள் உண்மையானவை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் உறுதி...அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என வழக்கறிஞர் நோட்டீசுக்கு பதில்....
  • திருச்சி மாநகர காவல் ஆணையரிடம், ஓ.பி.எஸ் அணியினர் மீது அதிமுகவினர் புகார்.....அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.....
  • பெரியகுளத்தில் ஓபிஎஸ்-ஐ பார்த்து ஈபிஎஸ் குனிந்து வணங்குவதை போன்று பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு...புகாரின் பேரில், பேனரை அகற்றி போலீசார் நடவடிக்கை
  • சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்க குடும்ப அரசியலே காரணம்....ஊழலை ஒழிப்பதே தங்களது குறிக்கோள் என அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி...
  • டப்பிங் ஆர்டிஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு....விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
  • வேலூரில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை....இரவு ரோந்து பணியை சரியாக செய்யாத காவலர்களுக்கு எஸ்பி வாக்கி டாக்கியில் எச்சரிக்கை...
  • பாலாற்று படுகையில் இரவு பகலாக மணற்கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார்....மணல் கடத்தல்காரர்களிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் செல்போனில் லஞ்சம் கேட்பதாக பரவும் ஆடியோவால் பரபரப்பு...
  • கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே, களிமண் அள்ளிச் சென்ற லாரிகள் சிறைபிடிப்பு...மறையும் மையால் தேதிகளை மாற்றி கனிமவளத்தை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு...
  • அண்ணாமலை பல்கலைக்கழக முறைகேடுகளை கண்காணிக்கக் கோரிய வழக்கு....தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
  • தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹிட்டை தாண்டி சுட்டெரித்த வெப்பம்....அதிகபட்சமாக ஈரோட்டில் 105 புள்ளி 8 டிகிரி பதிவான வெயிலால் மக்கள் அவதி...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை எதிரொலி...சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் இதமான சூழல்....

Next Story

மேலும் செய்திகள்