Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

3700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்...சென்னையில் நடைபெறும் விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்...

சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையம் இன்று திறப்பு...பிரதமர் மோடி இன்று பிற்பகலில் திறந்து வைக்கிறார்...

சென்னை, கோவை இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்...தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் மேம்பாலம், புதிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளும் இன்று துவக்கம்...

பிரதமர் வருகையொட்டி, பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை....வேளச்சேரி அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாக சென்னைக்கு செல்லலாம் என அறிவிப்பு...

பிரதமரின் வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு... மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை...நூற்றுக்கணக்கான கருப்பு பலூன்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கைது...

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 300ஐ கடந்தது...தற்போது 1530 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதரத் துறை தகவல்...

புதிய வகையாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு, 5 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் எனவும் அறிவுரை...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கிடைத்த அன்னிய செலாவணி அளவு ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்...கொரோனாவுக்கு பிறகு, மீண்டும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல்...

அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு இன்று பேச்சு வார்த்தை...வருகிற 11ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்குமா..?தேர்தல் ஆணைய விதிமுறைகளால் கட்சி சின்னம் கிடைப்பதில் சிக்கல்...

பாரத நாட்டின் கலாச்சாரத்தில் சேவை மனப்பான்மை ஒன்றி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...அன்னிய படையெடுப்புக்கு பின் சேவை மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து...

தமிழக மக்களின் உணர்வுகளையும், சட்டமன்ற இறையாண்மையையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ரவி அவற்றை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்...சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வரவேற்பு.....உண்மையை விசாரிக்காமல் ஆளுநர் எதையும் பேசியிருக்க மாட்டார் என கருத்து...

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாக ஆளுநர் கூறியது தொடர்பாக அவதுறு வழக்கு தொடரப்படும்...அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் தகவல்...

அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி கிப்ட் கார்டு அனுப்பி பண மோசடி...தபால் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரிக்கை...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அம்மன் கோயிலுக்குள் நுழைந்ததாக, பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல்...சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்..

நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்...விசாரணை அதிகாரியாக அமுதாவை நியமித்து அரசாணை வெளியீடு....

ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை...பிற்பகலில் கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதல்...

சென்னையில் வருகிற 12ஆம் தேதி நடைபெறும் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கான போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை...ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்