Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2026) | 7PM Headlines | Thanthi TV
- கல்வி நிறுவனங்கள் மூலம் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்... காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாடு ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்காது என்று தெரிவித்தார்...
- தமிழகத்தை சேர்ந்த ஓவியர் கிருஷ்ணன் மற்றும், மிருதங்க கலைஞர் திருவாரூர் பக்தவத்சலத்திற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.... ராஜ ஸ்தபதி காளியப்ப கவுண்டர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் பஜனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது...
- பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது... தமிழ்நாட்டில் எழுத்தாளர் சிவசங்கரி, தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலாநந்தன் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...
- ஒரு துளி ஊழல் கூட தன் கையில் படியாது என விஜய் உறுதி அளித்துள்ளார். ஒரு பைசா தொட மாட்டேன்.... தனக்கு அதை தொட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
- அழுத்தத்திற்கு அடங்கிப்போகும் ஆள் நான் இல்லை என மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தவெகவின் அரசியல் பயணத்தில் இது மிக மிக முக்கியமான காலகட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
Next Story
