Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை.... 2 நாட்களில் தங்கம் விலை 2 ஆயிரம் ரூபாய் குறைந்ததால் மக்கள் சற்று ஆறுதல்...
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு... சட்டமாக மாறியதைத் தொடர்ந்து, அரசிதழலிலும் வெளியீடு....
  • நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • செங்கல்பட்டு, கோவை, மதுரை, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
  • கன்னியாகுமரியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்... 2 நாட்களுக்கு குளிக்க தடை விதித்த பேரூராட்சி நிர்வாகம்...
  • கடலூரில் தனியார் தேர்வு மையத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்ததாக எழுந்த புகார்... மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய முதன்மை கண்காணிப்பாளர், பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு...
  • தூத்துக்குடி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு... தாளமுத்து நகர் காவல் நிலையத்தில், 1999ஆம் ஆண்டு விசாரணை கைதி மரணம் அடைந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
  • கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்ற பக்தர்களை மறித்து விரட்டிய ஒற்றை காட்டு யானை... விரட்ட முயன்ற வனத்துறையினரையும் காட்டு யானை ஓட விட்டதால் பரபரப்பு...
  • கரூர் அருகே அரசு பள்ளியில், மாணவிகள் கழிவறைக்கு செல்ல, பதிவேடு பின்பற்றப்படுவதாக ஆட்சியரிடம் புகார்... கழிவறைக்குள் காலணிகள் அணிந்து செல்லக்கூடாது என்று தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டு...
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், வாரச்சந்தையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம்... 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறை...
  • மதுரை மண்டேலா நகர் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு... புதருக்குள் மறைந்திருந்த நபர் திடீரென பாய்ந்து நகையை பறித்து சென்றதால் அதிர்ச்சி...
  • இலங்கை அதிபர் அனுரகுமார திச நாயகவுடன், பிரதமர் மோடி சந்திப்பு... இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை...
  • டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில், சி.எஸ்.கே. 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி... தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி...

Next Story

மேலும் செய்திகள்