Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2025) | 6 AM Headlines | ThanthiTV
- ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், இன்று மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தை நெருங்குவார்கள் என எதிர்பார்ப்பு....
- போர் நிறுத்தம் குறித்த டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, ஈரானும் இஸ்ரேலும் ஒருவர் மீது ஒருவர் உக்கிரமாக தாக்குதல்... போர் நிறுத்தத்தை மீறியதாக ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி குற்றச்சாட்டு...
- இஸ்ரேல் தொடங்கிய 12 நாள் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் (Masoud Pezeshkian) அறிவிப்பு...ஈரானின் வீரமிக்க எதிர்ப்புக்குப் பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வந்து வரலாற்றை உருவாக்கியுள்ளதாகவும் பெருமிதம்....
- இஸ்ரேலுக்கு எதிரான 12 நாள் போரில் வெற்றி பெற்றதாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் கொண்டாட்டம்...ஈரானிய கொடியை கையில் ஏந்தி, இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்...
- இஸ்ரேலுக்கு எதிரான 12 நாள் போரில் வெற்றி பெற்றதாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் கொண்டாட்டம்... ஈரானிய கொடியை கையில் ஏந்தி, இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்...
- அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்... மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்...
- போதைப்பொருள் விவகாரத்தில் பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்.....4வது முறையாக நானே கேட்கும் அளவிற்கு கொக்கைனுக்கு அடிமையாகி விட்டதாக நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்........
- போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன்...கேரளாவில் படப்பிடிப்பில் உள்ள நிலையில், நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம்...
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி...5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை...
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி...5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை...
- நடிகர் அஜித் குமாரின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரல்...ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ள அஜித்குமார்..
- நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி...தற்போதைக்கு அதில் எதையும் பதிவிடவில்லை எனவும், கணக்கை சரி செய்யும் வரை காத்திருங்கள் எனவும் ரசிகர்களுக்கு கோரிக்கை...
Next Story
