Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2022)
- ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் அமலுக்கு வந்தது...அக்டோபர் 1ம் தேதியே ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தகவல்.
- அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்து, 3ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது பற்றி உடனடியாக ஏன் தெரிவிக்கவில்லை...பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
- அக்டோபர் 17ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப் பேரவை கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், துணைத் தலைர் ஓபிஎஸ் கடிதங்கள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்.
- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்...சென்னை சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிடுகிறார்.
- திமுக தலைவராக மீண்டும் தேர்வாகிறார், முதல்வர் ஸ்டாலின்...கட்சியின் பொதுச் செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
- நீலகிரியில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என தகவல்...நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக மேலிடம் முடிவு.
- ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று கூறி தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சி....நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றசாட்டு.
- திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைப்பு...உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றச்சாட்டு.
- தமிழகத்தை மத்திய பாஜக அரசு பழி வாங்க நினைத்தால், திமுகவின் போர் குணம் வெளிப்படும்...திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை.
- இந்து சமய அறநிலைய துறையை சைவம், வைணவம் என இரண்டாக பிரிக்க வேண்டும்..விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை.
- பெங்களூரில் ஓலா, ஊபர் வகை ஆட்டோக்களுக்குத் தடை...பல மடங்கு கட்டணம் வசூலித்ததால் அரசு நடவடிக்கை.
- ஆப்கானிஸ்தானில் இருந்து கொச்சிக்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கோடி மதிப்பிலான ஹெராயின்...ஈரானை சேர்ந்த 6 பேரை இந்திய கடற்படை கைது செய்தது.
Next Story
