Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது...

பாட வாரியாக மதிப்பெண் விபரங்களுடன், உடனடியாக மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது....

தமிழகத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் நேற்று நீட் தேர்வு எழுதினார்கள்..

இயற்பியல், வேதியியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து..

வங்கக் கடலில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது....

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

சித்திரை திருவிழா முடிந்து, மதுரையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார்...

அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை தரிசிப்பதற்காக, நள்ளிரவிலும் குவிந்த பக்தர்கள்...

கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் படகு கவிழ்ந்து

22 பேர் பலி...8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் இன்று காலை மீண்டும் துவங்குகிறது...

கேரள படகு விபத்தில் பலியானோருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல்...

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பாக தலா 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்