Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025) | 6 AM Headlines | ThanthiTV
x
  • தமிழகத்தில் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..... 100 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என்றும் திட்டவட்டம்....
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகளில் தளர்வு.... விண்ணப்பம் அளித்து நிராகரிக்கப்பட்ட 48 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு.....
  • சென்னையில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..... வியாசர்பாடியில் 47 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பணிமனையையும் திறந்து வைக்கிறார்....
  • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு.... 3 ஆயிரத்து 331 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு 35 லட்சம் முதல் 2 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம்....
  • சிவகங்கை மாவட்டம், திருபுவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம்... காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்...
  • திருபுவனத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்... கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு....
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான 78 நாளில் இளம்பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர், மாமனார், மாமியார் கைது... வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்...
  • கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள் மூலம் இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முக மாதிரிகள் வெளியீடு.... கீழடி வாழ்வியல் முறை அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..
  • டிஎன்பிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் திருச்சி அணி அபாரம்.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

Next Story

மேலும் செய்திகள்