Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2025) | 6 AM Headlines | ThanthiTV
x
  • இந்தியா, பாகிஸ்தான் இடையே தரை, வான் என அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்பந்தம்.... பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் குழு இயக்குனர், இந்திய ராணுவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது போர் பதற்றம்....
  • இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல்... மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்...
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை...... இருநாடுகளின் ராணுவ தலைமை இயக்குனர்கள் சார்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிப்பு...
  • போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு மீண்டும் திறப்பு... இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து நடவடிக்கை...
  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்... போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்னரோ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உட்படவில்லை என்றும் தகவல்.....
  • அமெரிக்காவின் தொடர் பேச்சுவார்த்தையால், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம்....... அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்....
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தையை தொடர்ந்தே சண்டை நிறுத்தம் என மத்திய அரசு அறிவிப்பு... அமெரிக்காவின் தலையீட்டால் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், மறுப்பு....
  • எல்லையில் மோதல் நிறுத்தப்படுவதாக அறிவித்த பிறகும், தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், ரஜோரி, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் தாக்குதல்கள் முறியடிப்பு....
  • பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் எதிரொலியாக எல்லையோர கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு..... ராஜஸ்தானின் பார்மர், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின...

Next Story

மேலும் செய்திகள்