காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு... ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதிரடி...
- வக்பு திருத்த சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு செய்து மட்டுப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி.... சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி....
- வக்பு திருத்தச் சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து தாவூதி போஹ்ரா சமூகத்தினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.... வக்பு திருத்தச் சட்டம் சிறுபான்மையிலும் சிறுபான்மையினருக்காக கொண்டுவரப்பட்டதாக பிரதமர் பெருமிதம்....
- உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் காட்டம்... உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 142வது சட்டப்பிரிவு, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும் விமர்சனம்...
- சட்டங்களை இயற்றி நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சூப்பர் நாடாளுமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்வதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் தாக்கு.. மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விமர்சனம்...
- மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போக செய்யும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர திட்டம் என தகவல்.....
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு ஒப்புதல்... அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் 10 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க இலக்கு...
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 23ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்.... பாஜக கூட்டணி உறுதியான நிலையில், விருந்து உபசரிப்போடு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்....
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை.... 5வது வெற்றியை ஈட்டப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
Next Story
