Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2025) | 6 AM Headlines | ThanthiTV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.04.2025) | 6 AM Headlines | ThanthiTV
- இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதித்தது அமெரிக்கா.... கட்டண விவரம் தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்..... புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தகவல்.....
- இந்தியா மீது 26 சதவீதம் பரஸ்பர வரிகளை விதித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.... சீனா மீது 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 20% மற்றும் ஜப்பான் மீது 24% வரிகள் விதிப்பு...
- அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு....
- அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு மிகவும் தவறானது என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி எதிர்ப்பு... பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும் என்றும் கருத்து....
- டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, ஒரு நண்பனின் செயல் அல்ல என ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் (Anthony Albanese) கருத்து.... தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம்., எதிர்த்து நிற்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னே (Mark Carney) அறிவிப்பு....
- அமெரிக்கா விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளில் தங்கத்துக்கு விலக்கு..... வெள்ளி மற்றும் மருந்து பொருட்களுக்கும் விலக்கு அளித்த டிரம்ப்....
- வக்பு சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.... நள்ளிரவை தாண்டி விவாதம் நடைபெற்ற நிலையில் 288 பேர் ஆதரவு... 232 உறுப்பினர்கள் எதிர்ப்பு...
- வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.... மக்களவையில், மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு...
- நாடாளுமன்ற மக்களவையில், வக்பு சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு.... மசோதா மீதான விவாதத்தின்போது, பரபரப்பு....
- வக்பு சட்ட திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்... இஸ்லாமிய மக்கள் நலனையும், வக்பு அமைப்புகளையும் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்த வலியுறுத்தல்...
- 13 கோடி உறுப்பினர்களால் பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதால், தாமதம் ஆவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்... அனைத்துக் கட்சிகளின் தேசியத் தலைவர்களும், சில குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் விமர்சனம்...
- புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வது வேகமாக அதிகரித்து வருகிறது.... மாநிலங்களவையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்....
Next Story
