Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.04.2025) | 6 AM Headlines | ThanthiTV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.04.2025) | 6 AM Headlines | ThanthiTV
- வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்... பாஜக எம்பிக்கள் தவறாமல் பங்கேற்குமாறு கட்சி கொறடா உத்தரவு... 3 நாட்கள் விவாதத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தங்களது எம்பிக்களுக்கு காங்கிரஸ் கொறடாவும் உத்தரவு...
- கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்... தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிவதாக தகவல்...
- வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை... பிரதமர் மோடி வருகையையொட்டி, மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு...
- நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு... மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு...
- நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.... தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் கணிப்பு....
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு..... முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு....
- தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்.... நடப்பு ஆண்டில் இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 310 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...
- பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மனு... தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....
- மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் 24 காட்சிகள் நீக்கம்... நன்றி அறிவிப்பில் இருந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயரும் நீக்கம்...
- எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு காட்சிகளை நீக்க வேண்டும்... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்...
- கேரளாவில், எம்புரான் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம்... பாஜக திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் வி.வி. விஜிஷ் சஸ்பெண்ட்....
Next Story
