காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு... பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்ல, ஒரே நேரத்தில் குவிந்த போது நிகழ்ந்த சோகம்...
  • டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த பயணிகள்... 13, 14 மற்றும் 15ஆம் நடைமேடைகளில் நின்ற ரயில்களில் ஏற முண்டியடித்தால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்...
  • டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்த விவகாரம்... உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு...
  • டெல்லி ரயில் நிலையத்தில் எதிர்பாராத வகையில், திடீரென குவிந்த கூட்டத்தால், அசம்பாவிதம் நிகழ்ந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்... நான்கு சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்...
  • சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்களை, விமானம் மூலம் அனுப்பி வைத்த அமெரிக்கா... பஞ்சாபின் அமிர்தரஸ் விமான நிலையத்திற்கு வருகை...
  • புதிய கல்வி கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்கும் போது, தமிழகம் மட்டும் மறுப்பது ஏன் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி... புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை தர முடியாது எனவும் திட்டவட்டம்...
  • மத்திய அரசிடம் பிச்சை கேட்கவில்லை, எம்மிடம் இருந்து பறித்துக் கொண்டதையே கேட்கிறோம்... அண்ணாவின் ஆடியோவை வெளியிட்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி...
  • மும்மொழி கொள்கை விவகாரத்தில், இன்னொரு மொழிப்போரை தூண்ட பார்க்கிறது, மத்திய அரசு... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரபரப்பு குற்றச்சாட்டு...
  • சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 27 கிலோ ஆபரணங்கள் சென்னை வருகை... பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட நகைகள், தமிழக அரசிடம் ஒப்படைப்பு...
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 27 கிலோ ஆபரணங்கள் குறித்து, ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்... சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்...
  • பாஜகவின் அறிக்கை போலவே, எடப்பாடி பழனிசாமியின் குரல் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... பாஜகவுடன் கள்ளக் கூட்டணி இருப்பதை ஈ.பி.எஸ். அடிக்கடி நிரூபிக்கிறார் என்றும் விமர்சனம்...
  • மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில், மும்பை அணியை வீழ்த்தியது டெல்லி... 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்