காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 6 AM Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 6 AM Headlines | Thanthi TV
- Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 6 AM Headlines | Thanthi TVபரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது...
- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆப்ரேசன் சிந்தூர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார்... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேட்டி...
- இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்... அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்...
- பஹல்காம் தாக்குதல் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்.... திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி.....
- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம்.... தமிழக அரசு அறிவிப்பு...
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணத்திற்கான ஒப்பந்தம் நிறைவு.. மறுஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு..
- தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவையில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு...
- திருப்பூர் மாவட்டத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல..." கூட்டணி குறித்து அதிமுகவிற்கு எந்த கவலையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
- ஈபிஎஸ் கருத்தில் உள்நோக்கமோ, உள் அர்த்தமோ இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம்...
- பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, அதே நேரத்தில் ஏமாறக்கூடிய கட்சியும் இல்லை... வேண்டாத அழையாத விருந்ததாளியாக எங்கும் சென்றதில்லை என அண்ணாமலை உறுதி...
- முதலமைச்சர் ஸ்டாலின் உடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு...
- பாமக எம்.எல்.ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம்...
- “10.5% இட ஒதுக்கீட்டை வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்“ - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை...
- பேனர்கள், போஸ்டர்களில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' என்ற வாசகத்தை பயன்படுத்த தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்..
- வரும் 23 முதல் 26 வரை பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாட்கள் சுற்றுப் பயணம்...
- இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி-4 கார் பந்தயத்தில், விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்...
- இந்தோனேஷியாவில், 280 பேருடன் சென்ற சொகுசுக் கப்பல், நடுக்கடலில் பற்றி எரிந்ததால் பரபரப்பு....... 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்....
- மகளிர் செஸ் உலகக் கோப்பை - கோனேரு ஹம்பி சாதனை
- நாளை மறுநாள் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருந்து, இந்திய வீரர் நிதிஷ் குமார் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல்...
- சென்னையில், வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கச்சேரி ஒத்திவைப்பு...
- சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா சென்னை வருகை... ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்...
- மதுரையில், 'திருவிளையாடல்' திரைப்படத்தின் அறுபதாவது ஆண்டு வைர விழா கொண்டாடிய சிவாஜி ரசிகர்கள்...
- கேரளாவில் ஓணம் கொண்டாட, தேங்காய் எண்ணெய், சர்க்கரை உட்பட 15 வகை பொருட்களை இலவசமாக வழங்க அரசு முடிவு...
- ஜப்பானில் நடந்த மேலவைத் தேர்தலில், ஆளும் வலதுசாரியான 'லிபரல் டெமாக்ரடிக் கட்சி' பெரும்பான்மையை இழக்க வாய்ப்பு...
Next Story
