இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025) | 11 PM Headlines | Thanthi TV
Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025) | 11 PM Headlines | Thanthi TV
- இந்தோனேஷியாவில், தீப்பிடித்த கப்பலில் இருந்து உயிர்தப்ப கடலில் குதித்த சுற்றுலா பயணிகள்... காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்...
- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆப்ரேசன் சிந்தூர் பற்றி விவாதிக்க தயார்... - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேட்டி...
- பஹல்காம் தாக்குதல் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்.... -திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி.....
- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம்.... -தமிழக அரசு அறிவிப்பு...
- திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்...
- பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு...
- ஈபிஎஸ் கருத்தில் உள்நோக்கமோ, உள் அர்த்தமோ இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம்...
- அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்ததாக கேள்வி எழுப்பியதால் ஈபிஎஸ் அவ்வாறு சொன்னதாக பதில்...
- முதலமைச்சர் ஸ்டாலின் உடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு... மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த சீமான்...
- தமிழக அரசியலில், த.வெ.க தலைவர் விஜய்யை விட அண்ணாமலை தான் பெஸ்ட்... - நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கருத்து...
- சென்னையில், வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கச்சேரி ஒத்திவைப்பு... அதிக ரசிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், போதிய இடம் இல்லாததால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு..
- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்... 5 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயம்...
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி விபத்து...சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆட்சியர் நேரில் ஆய்வு....
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாளில் 17 வயது சிறுமி உயிரிழப்பு... சிறுமியை திருமணம் செய்த சக்திவேல் என்பவர் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது...
Next Story
