Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன்பதிவு... தொடங்கிய சிறிது நேரத்திலேயே தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ் ஃபுல்....
  • சென்னை கோயம்பேடு சந்தையில், தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்பனை..... மற்ற காய்கறிகளின் விலையிலும் ஏற்றம் இறக்கம்....
  • ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இனி 28% வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு.. வரி குறைக்கப்பட்டதால், தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் விலை குறைய வாய்ப்பு...
  • பணமோசடி தடுப்புச் சட்ட வரம்புக்குள் ஜிஎஸ்டி கொண்டு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு... சிறு வணிகர்களை பாதிக்கும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்...
  • ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, இன்று காங்கிரஸ் சார்பாக சத்தியாகிரக போராட்டம்... கன மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல் மாநிலங்களில் மட்டும் போராட்டம் ரத்து என அறிவிப்பு...
  • பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.... அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டம்..... மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மெட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு வாய்ப்பு என தகவல்....
  • பெங்களூரில் ஜூலை 17 ,18ம் தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன... காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என்றும் தகவல்...

Next Story

மேலும் செய்திகள்