Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இனி 28% வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு.. வரி குறைக்கப்பட்டதால், தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் விலை குறைய வாய்ப்பு...
  • பணமோசடி தடுப்புச் சட்ட வரம்புக்குள் ஜிஎஸ்டி கொண்டு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு... சிறு வணிகர்களை பாதிக்கும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்...
  • ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, இன்று காங்கிரஸ் சார்பாக சத்தியாகிரக போராட்டம்... கன மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல் மாநிலங்களில் மட்டும் போராட்டம் ரத்து என அறிவிப்பு...
  • அமலாக்கத்துறை இயக்குனராக யார் பொறுப்பேற்றாலும், வாரிசு அரசியலின் ஊழலை சோதனை செய்வார்கள்... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்...
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை... கரூரில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை மூன்றாம் கட்டமாக சோதனை நீடித்தது...
  • கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்? என, நீதிபதி கேள்வி... அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை தொடருகிறது...
  • தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு... மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • கொடநாடு வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கை வரும் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்பு... ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் ஆர்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், புதிய தகவல்...
  • அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் உறுப்பினராகலாம்... பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்