இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலட்சினை வெளியீடு...

நாளை நடைபெறும் விழாவில், குறும்படம் வெளியீடு... புகைப்பட கண்காட்சியும் துவக்கி வைப்பு...

---

சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு...

பாஜக கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

---

"ஜனநாயகம் காக்க, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு அவசியம்..."

"2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, டெல்லி முதல்வரிடம் பேசியதாகவும்,

முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...

---

"மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது..."

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால், மசோதாவை தோற்கடிக்க முடியும் என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை...

----

மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு...

தமிழக உரிமையை அரசு நிலைநாட்ட வேண்டும் என, ஓ.பி.எஸ். வலியுறுத்தல்...

---

எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என, அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...

தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும் என்றும் விளக்கம்...

--

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்...

மேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது... வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என்றும் விளக்கம்...

--

"தென்மேற்கு பருவ மழைக்கான, சாதகமான சூழல் மேலும் வலுப்பெற்றுள்ளது..."

தென்கிழக்கு அரபிக்கடலில், வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்றும் இந்திய வானிலை மையம் தகவல்...



Next Story

மேலும் செய்திகள்