Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2023) | Morning Headlines | Thanthi TV
x

பிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை.... அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், விரைவில் நிலைமை சீராகும் எனவும் பிபிசி விளக்கம்...

பிபிசி நிறுவனத்தில் வருமான வரி ஆய்வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... அரசியல் எதிரிகளை குறி வைத்து, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை அமைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு, தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அறிக்கை...

குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படம் வெளியிட்டதால் பிபிசி நிறுவனத்தில் ரெய்டு நடத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு... தானும் தொடர்ந்து பேசி வருவதால், தனது வீட்டிலும் ரெய்டு நடத்த வரலாம் எனவும் சவால்...

ஈரோடு தொகுதி இடைத் தேர்தலில், டெபாசிட்டை காப்பாற்றினால் போதும் என்ற நிலைமைக்கு அதிமுக வந்து விட்டது... பிரசார கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பேச்சு...

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கை மணியடிக்கும்... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

ஈரோடு தொகுதியில் வாக்காளர் பட்டியல் குறித்து பொய் குற்றச்சாட்டை அதிமுகவினர் கூறுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்... திமுகவை குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை எனவும் பதிலடி...

ஈரோடு தொகுதியில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்... பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் குற்றச்சாட்டு...

நாகாலாந்தில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி... சட்டப்பேரவை தேர்தலுக்காக, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி...






Next Story

மேலும் செய்திகள்