Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2023) | Morning Headlines | Thanthi TV
x

சிவாலயங்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா சிறப்பு பூஜை.... நெல்லையப்பர் கோயில் உட்பட கோயில்களில் நடராஜரை தரிசிப்பதற்காக அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர்...

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் தங்களை மதத்தின் துரோகிகளாக சித்தரிக்க பலர் முயற்சிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு... திமுக அரசுக்கு எந்த வித வேற்றுமையும் கிடையாது எனவும் உறுதி...

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிப்பு...நேற்று ஓ.பி.எஸ் தரப்பு வாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஈ.பி.எஸ் தரப்பு வாதம் துவங்கும் என தகவல்...

டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க வேண்டும்... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை...

வருகிற 10ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்... சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு...

பெண் காவலர் பாதுகாப்பு குறித்து முதல்வரிடம் விசிக திருமாவளவன் கேள்வி எழுப்ப வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்... திமுகவினர் மீது புகார் அளித்த பெண் காவலரையே, புகாரை வாபஸ் பெறச் செய்ததாகவும் விமர்சனம்...

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து எதிரொலியாக, ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது, #தமிழ்நாடு என்ற வார்த்தை... முன்னாள் முதல்வர் அண்ணாவை புகழும் நெட்டிசன்கள்...



Next Story

மேலும் செய்திகள்