Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2022) | Morning Headlines | Thanthi TV
x

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது... சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை...

கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், அரியலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுமுறை அளித்து உத்தரவு... புதுச்சேரியிலும் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்...

இன்றும் நாளையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்... தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 13ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பேட்டி...

மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது..... ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 22 வீரர்களை கொண்ட குழு செல்கிறது...

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மழை பெய்வதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...குடிநீர் பஞ்சம் நீங்கியதாகவும் விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் பேச்சு...

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்.... கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...



Next Story

மேலும் செய்திகள்