Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-10-2022) | Morning Headlines | Thanthi TV
x

தாய்லாந்தில் தவித்த தமிழர்கள் 13 பேர், தமிழகம் வருகை... சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் வரவேற்றார்...

தாய்லாந்து, மியான்மரில் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக தகவல்... விரைவில் அவர்களும் மீட்கப்படுவார்கள் என அமைச்சர் மஸ்தான் உறுதி...

தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று தசரா திருவிழா... மகிஷா சூரசம்ஹாரத்துக்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்...

மைசூரில் இன்று தசரா திருவிழா கொண்டாட்டம்... மின் விளக்குகளால் மைசூரு அரண்மனை ஜொலிக்கிறது...

ரேஷன் கடைகளில் மக்கள் விரும்பாத பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை... மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் எச்சரிக்கை...

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிவாரணம்... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

அதிமுகவை அழிப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒபிஎஸ் - சசிகலா - தினகரனுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம்.... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு...





Next Story

மேலும் செய்திகள்