Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2022) | Morning Headlines | Thanthi TV
10 ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி இணைய சேவை கிடைக்கும்.. அறிவுக்கூர்மை ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி...
கருணாநிதியின் ரத்தத்தால் தான் திமுக கொடி உருவாக்கப்பட்டது... ஈரோட்டில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..
அதிமுக வழக்கில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், தரப்பு பரபரப்பு வாதம்... தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது ,சென்னை உயர் நீதிமன்றம்...
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது திருட்டு வழக்கு... அதிமுக தலைமை அலுவலக கலவரத்தின்போது ஆவணங்களை அள்ளிச் சென்ற புகாரில் போலீசார் அதிரடி..
உதகை நீதிமன்றத்தில் இன்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை... சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகின்றனர்...
திமுக எம்எல்ஏவின் பேரப்பிள்ளைக்கும், வருமான வரித் துறைக்கும் காது குத்தப்பட்டதா? 11 கோடி ரூபாய் மொய் விருந்து வசூல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...
ஆன்லைன் ரம்மியை போலவே, டாஸ்மாக் கடைகளுக்கும் மக்களிடம் கருத்து கேட்டு மூடத் தயாரா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...
புதிய விமான நிலையம் தொடர்பாக பரந்தூரில் பாமக சார்பில் கருத்து கேட்பு... அனாதையாக நிற்போம் என பாமக தலைவர் அன்புமணியிடம் கிராம மக்கள் கருத்து...
உதைக்கும் மாட்டிலேயே மிக வேகமாக பால் கறப்பவன்.... திருப்பத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் எவ வேலு பேச்சு....