Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை... சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்...

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு... அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்தே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் அதிரடி...

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பில் இன்று மேல்முறையீடு என தகவல்.. சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை...

டெல்லியில் பிரதமர் மோடிக்கு 9 வகையான தானிய பெட்டகத்தை பரிசாக வழங்கினார், முதல்வர் ஸ்டாலின்... நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி நேரில் வலியுறுத்தினார்...

ஆன்-லைன் ரம்மி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை... உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்...

போதை மாத்திரைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை... கொரியர் நிறுவனங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்...

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்... பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை...

அழகப்பா, திருவள்ளுவர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்... நியமன ஆணைகளை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி...

மூன்று லட்ச ரூபாய் வரையிலான விவசாய கடனுக்கு ஒன்றரை சதவீதம் வட்டி மானியம்... 34 ஆயிரத்து 856 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


Next Story

மேலும் செய்திகள்