Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2023)

x

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்...

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பெங்களூரு வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

பெங்களூரு விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...

எதிர்க்கட்சிகள் கூட்டம் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது...

வடமாநிலங்களை போல், தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட பொய் வழக்கு தான் இந்த வழக்கு...

அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவே கூட்டம்... காவிரி விவகாரம் குறித்த கூட்டமல்ல...

இந்தியாவுக்கு ஆபத்து வந்துள்ளது... அதனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

"எந்த சோதனைக்கும் தி.மு.க. அஞ்சாது..."

அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டு பயமில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாட்டு பாடி, இது பழிவாங்கும் நடவடிக்கை என அமைச்சர் துரைமுருகன் கருத்து...

அமைச்சர் பொன்முடியை சந்திக்க வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை...

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஏற்படும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி...

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை...

டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கண்டறியும் வகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு...

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணிக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை...

கயல் பொன்னி நிறுவனத்தில் சோதனை செய்து வரும் அதிகாரிகள்...


Next Story

மேலும் செய்திகள்