Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08.01.2023) | 9 PM Headlines | Thanthi TV

x

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08.01.2023)


பொங்கல் பரிசு தொகுப்பு - நாளை தொடக்கம்

ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்...

சென்னை அன்னை சத்யா நகரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

-----------------------------------

அனல் பறந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டின் முதல் போட்டியாக, புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் இன்று களைகட்டிய ஜல்லிக்கட்டு...

பெண் காவலர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் காயம்...

அனுமதி இன்றி காளையுடன் நுழைந்தவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு...

-----------------------------------

ஆளுநரின் கருத்து - தொடரும் விவாதம்

ஆளுநர் ஆர்.என். ரவி, பதவியில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். பணிகளை செய்யலாம் என திருமாவளவன் இன்று விமர்சனம்...

தமிழகம் என்று ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேச்சு...

-----------------------------------

மத்திய குழு நாளை ஆய்வு

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் வீடுகள், சாலைகளில் ஏற்பட்ட விரிசல்களை நாளை ஆய்வு செய்கிறது, மத்திய குழு...

பிரதமரின் முதன்மை செயலர் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இன்று அறிவிப்பு...

-----------------------------------

"கோட்டையை முற்றுகையிடுவோம்"

காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும், கோட்டையை நிச்சயம் முற்றுகையிடுவோம்...

பணி நிரந்தரம் வழங்கப்படாததை கண்டித்து, ஒப்பந்த செவிலியர்கள் இன்று அறிவிப்பு...

-----------------------------------

5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் அலை காரணமாக, பஞ்சாப் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்...

வரும் 10ஆம் தேதி முதல் குளிர் படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை மையம் இன்று தகவல்...

-----------------------------------


Next Story

மேலும் செய்திகள்