பிறந்த ஊரை சிட்டியாக மாற்ற…வாரி வழங்கிய மண்ணின் மைந்தன்...திக்குமுக்காடிய ஊர் மக்கள்

x

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில், தான் பிறந்து, வளர்ந்த ஊரை மேம்படுத்துவதற்காக, மலேசிய தொழிலதிபர் ஒருவர் 13 கோடி ரூபாய் நன்கொடை வழங்க முன்வந்துள்ளார்.

பூலாம்பாடியை சேர்ந்த பிரகதீஸ்குமார் மலேசியாவில் தொழிலதிபராக உள்ளார்.

இவர் பூலாம்பாடியை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆலோசித்த நிலையில், 33 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இதனை மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் மூலம் நிறைவேற்ற அனுமதியும் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 90 லட்சம் ரூபாய் வழங்கிய பிரகதீஸ்குமார் , ​​இரண்டாம் கட்டமாக 60 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்