வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு... விரைவில் வெளியாகப்போகும் அரசாணை

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் 2 மடங்காக உயரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலங்குகள் மற்றும் பூங்காவைப் பராமரிக்க போதிய வசதிகள் செய்ய வருமானம் இல்லாததால் நுழைவுக் கட்டணம், பேட்டரி வாகன கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. நுழைவுக் கட்டணம் 200 ரூபாயாகவும், பேட்டரி வாகனங்கள், கேமரா கொண்டு செல்வதற்கான கட்டணம், உட்பட அனைத்து சேவைகளுக்குமான கட்டணங்களையும் உயர்த்தி இன்னும் ஓரிரு நாட்களில் அரசு அரசாணை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com