பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 47 லட்சம் மோசடி - வெளிச்சத்துக்கு வந்த பல உண்மைகள்

x

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழத்தில் வேலை வாங்கித் தருவதாக 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த பரிமேல் செல்வனுக்கு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், மதகடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரனும், வெங்கடேசனும் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய பரிமேல் செல்வனிடம், பல தவணைகளாக 47 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால், வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த பரிமேல் செல்வன், இதுகுறித்து, பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்திரனையும், வெங்கடேசனையும் கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளாவில் வெங்கடேசன் மோசடியில் ஈடுபட்டுள்ளதும், அவர் மீது பல மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்