டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் - எலிமினேட்டரில் நெல்லை த்ரில் வெற்றி

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை த்ரில் வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய நெல்லை 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அஜிதேஷ் மற்றும் நிதிஷ் ராஜகோபால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். பின்னர் ஆடிய மதுரை, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை, 2வது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் 2வது குவாலிஃபயர் போட்டியில் திண்டுக்கல்லுடன் நெல்லை மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்