டிஎன்பிஎல் தொடர்..திருப்பூர் அணி அபார வெற்றி

x

டி.என்.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றுள்ளது. டி.என்.பி.எல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில், திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த நெல்லை அணி, 18.2 ஓவர்களில் வெறும்124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணி, 18.2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திருப்பூர் அணியில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா, 49 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்