"எங்களுக்கான தீர்வை கொடுக்க யாருமில்லை" - மின்கம்பத்தில் ஏறி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

x

"எங்களுக்கான தீர்வை கொடுக்க யாருமில்லை" - மின்கம்பத்தில் ஏறி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும்18 ஆயிரம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யகோரி போராடி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளர்களில் சிலர் அருகே இருந்த மின் டிரான்ஸ்பார்மர்களில் ஏறி அமர்ந்தும், மின்கம்பங்களில் ஏறி அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, மின்சார வாரியம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 மணி நேர போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்