"இப்படிப்பட்ட மோசமான ஆளுநரைப் பார்த்ததில்லை" - "இனி இவருக்கு எதிரான போராட்டம் தொடரும்" -

x

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தவுடன் அவருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆன்லைன் ரம்மி தடை மசோதா, தமிழ்நாடு பெயர் விவகாரம் உள்ளிட்டவற்றில் ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர், ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியேயும் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.

--


Next Story

மேலும் செய்திகள்