இன்றும் மழை வெளுத்து வாங்கும்? - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்கள் என 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x

வங்க‌க் கடலில் நிலவிய காற்றழுந்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியா வலுவிழந்து குமரிக்கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்