நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடி கணக்கில் சுருட்டல் ..! - மோசடி கும்பல் பேசிய பரபரப்பு வீடியோ

x

வெளிநாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் தந்துள்ளது. இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை பெற்றதற்கான ஆணை, விசா உள்ளிட்டவை தயாராக இருப்பதாக கூறிய நிலையில் கடந்த 28ஆம் தேதி திடீரென அலுவலகம் பூட்டி கிடந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்