திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்... தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

x

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்னும் பெருமை பெற்ற தியாகராஜர் கோயில் தேரோட்டம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சிறப்பு ரயில் இயக்குகிறது. இந்த ரயில் வரும் மார்ச் 31-ஆம் தேதி 6:10-க்கும் விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம், நன்னிலம் வழியாக திருவாரூருக்கு இரவு 10:20 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்