திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணம் உயர்த்த முடிவு

x

திருத்தணி முருகன் கோயிலில், அபிஷேகம், சேவை கட்டணம் உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பூஜைகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சேவை கட்டணங்களை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வரும் 25ஆம் தேதிக்குள் கோயில் தலைமை அலுவலகத்தின் இணையதளம் வாயிலாகவோ, நேரடியாகவோ பக்தர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் கருத்துக்களை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து, ஒரு மாதத்துக்கு பிறகு கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்