"திருப்பூர் சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும்" - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

x

திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..


சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமசந்திரன், ஈஷா யோகா மையத்தில் நடந்த சுபஸ்ரீ மரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சுபஸ்ரீ காணாமல் போனதை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி பெறப்பட்ட புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டதாக கூறினார்.

துலுக்கான் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ உடல் கண்டறியப்பட்டவுடன் கோவை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டு 3 மருத்துவர்களால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஈஷா யோகா மையம், செம்மேடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் , அவரின் கணவர் கைபேசிகள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும் என்றும் உறுதியளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்