"லாரி,கார்களில் வந்து தனியார் ஹோட்டலை சூறையாடிய கும்பல்" - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

x
  • காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர், ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில், நில வாடகைக்கு ஹோட்டல் ஆரம்பித்துள்ளார்.
  • இதற்காக, அவர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 3 மாதங்களாக, அதே பகுதியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சுதா மற்றும் அவரது குடும்பத்தினர், ஹோட்டலை காலி செய்யும்படி, பெரியசாமியை மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
  • இந்த நிலையில், டாரஸ் லாரி மற்றும் கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட கும்பல், ஹோட்டலை சூறையாடியது.
  • அதிமுக கவுன்சிலர் சுதா மற்றும் அவரது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில், இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறி புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, 20க்கும் மேற்பட்ட கும்பல் ஹோட்டலை சூறையாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்